பிக்பாஸ் அல்டிமேட்: எண்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா!

லாஸ்லியா
லாஸ்லியா

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் லாஸ்லியா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைய இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பிக்பாஸின் ஐந்து சீசன்களையும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் அல்டிமேட்டையும் அவரே தொகுத்து வழங்கினார். ஆனால், ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு தேதி ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து பிக்பாஸ் ஆறாவது சீசனில் திரும்ப வருவதாக கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

முப்பது நாட்கள் கடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இப்போது நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸின் தீவிர ரசிகரான சிம்பு கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளே வந்தார். போட்டியாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி அவர்களை உற்சாகபடுத்தினார். மேலும் கடந்த வாரம் நிகழ்ச்சியில் அவருடைய முதல் நாள் என்பதாலும் அதற்கு முந்தின சில நாட்களில் தான் வனிதா பிக்பாஸ் அல்டிமேட் வெளியேறியதாலும் கடந்த வாரம் யாரையும் வெளியேற்றவில்லை.

மாற்றாக, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ‘கலக்க போவது யாரு?’ சதீஷ் ஆகிய இருவரை வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்பி வைத்தது பிக்பாஸ் குழு. இந்த நிலையில் மேலும் ஒரு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக லாஸ்லியா உள்ளே வர இருக்கிறார். இதற்கான அறிவிப்பு இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

மூன்றாவது சீசனில், இலங்கையில் இருந்து செய்தி வாசிப்பாளராக லாஸ்லியா உள்ளே நுழைந்தார். பிறகு, யுவராஜ் சிங், சதீஷ் ஆகியோருடன் ‘நண்பேண்டா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இது தவிர, கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன் ஆகியோருடன் ‘கூகுள் குட்டப்பா’ படமும் இவரது கைவசம் உள்ளது. தர்ஷனும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் லாஸ்லியாவுடன் சக போட்டியாளராக கலந்து கொண்டார்.

செய்தி வாசிப்பு பணியை விட்டுவிட்டு படங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த லாஸ்லியா இப்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் நுழைய இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in