இளம் இயக்குநர்களுடன் அடுத்தடுத்து கைகோக்கும் ரஜினி!

இளம் இயக்குநர்களுடன் அடுத்தடுத்து கைகோக்கும் ரஜினி!

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து கைக்கோக்கும் இயக்குநர்கள் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். ’ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினி எந்த இயக்குநருடன் கைக்கோக்க இருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினி தனது 170-வது படத்திற்காக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை டிக் செய்திருக்கிறார். இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்து சிவகார்த்திகேயனை வைத்து தனது முதல் படமான ‘டான்’ இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி.

முதல் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தன் அறிமுகப் படத்திலேயே 100 கோடி வசூலை ஈட்டினார் சிபி சக்ரவர்த்தி. இந்த நிலையில், லைகா புரொடக்‌ஷனுடன் இவர் மீண்டும் கைகோக்கிறார். சிபியின் ‘டான்’ படம் பிடித்திருந்ததாலும், லைகாவுடன் நடிகர் ரஜினிக்கு இருக்கும் நல்ல புரிதல் காரணமாகவும் இந்தக் கூட்டணி சாத்தியப்பட்டது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

சிபி சக்ரவர்த்தியை அடுத்து ரஜினியின் 171-வது படத்தில் அவரை இயக்க இருப்பது அவரது மகளும் இயக்குநருமாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் என்கிறார்கள். தற்போதைக்கு இயக்குநரும் தயாரிப்புத் தரப்பும் மட்டுமே முடிவாகி இருக்கும் நிலையில், படத்தின் மற்றத் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரங்கள், பட அறிவிப்பு ஆகியவை ‘ஜெயிலர்’ பட வெளியீட்டிற்குப் பின்பு எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in