சொந்த மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அசத்தப்போகும் யுவன் ஷங்கர் ராஜா!

சொந்த மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அசத்தப்போகும் யுவன் ஷங்கர் ராஜா!

சொந்த மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார் யுவன் சங்கர் ராஜா.

திரையுகிற்கு யுவன் சங்கர் ராஜா வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் யுவன்-25 என்ற நிகழ்ச்சி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியால் மகிழ்ச்சியடைந்த யுவன், சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, சென்னையில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அண்மையில் அறிவித்த யுவன் சங்கர் ராஜா, இதற்கு 'யு & ஐ' என்று பெயரிட்டுள்ளார். செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்வதாக யுவன் கூறினார். சொந்த மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார் யுவன். இந்த இசை நிகழ்ச்சியை அவரது ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in