`அருமையான பாடலை கேட்க தயாராகுங்கள்'

மார்ச் 3ல் வெளியிடுகிறார் யுவன் ஷங்கர் ராஜா
`அருமையான பாடலை கேட்க தயாராகுங்கள்'

`நாளை மறுநாள் - மார்ச் 3ஆம் ஒரு அருமையான பாடலை கேட்க தயாராகுங்கள்'' என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில், "25 ஆண்டுகளைக் கடந்த தனது இசைப் பயணத்தில் துணை நிற்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. விருதுகள் எனக்கு ஒரு பொருட்டல்ல. ரசிகர்களின் இதயங்களை வெல்வதுதான் எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து என்னை இயங்கவைக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், திரைப்படங்களில் இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா அவ்வப்போது ஆல்பங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ``நாளை மறுநாள் - மார்ச் 3ஆம் ஒரு அருமையான பாடலை கேட்க தயாராகுங்கள்'' என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் துவணி பானு ஷாலி இணைந்து பாடியிருக்கிறார். ஆனால். இது ஆல்பம் போன்ற தனி பாடலா? அல்லது ஏதாவது திரைப்படத்தின் பாடலா? என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in