இளையராஜா எழுதிய பாடல்; யுவன் சங்கர் ராஜா பாடினார்

இளையராஜா எழுதிய பாடல்; யுவன் சங்கர் ராஜா பாடினார்
இயக்குநர் ஆதிராஜன், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

’நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இளையராஜா எழுதிய பாடலை யுவன் சங்கர் ராஜா பாடினார்.

இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் ’நினைவெல்லாம் நீயடா’ படத்தை ஆதிராஜன் இயக்கி வருகிறார்.

பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித், ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பாடல் பதிவின்போது இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஆதிராஜன்
பாடல் பதிவின்போது இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஆதிராஜன்

பள்ளிப் பருவக் காதலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்து இளையராஜா இசை அமைக்கிறார். பழநிபாரதி, சினேகன் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஹைலைட்டான பாடலை இளையராஜா எழுதி இருக்கிறார். ’இதயமே இதயமே இதயமே.. உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே’ என்று தொடங்கும் இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

இதுபற்றி இயக்குநர் ஆதிராஜன் கூறும்போது, "இந்தப்படத்திற்கு ஒரு பாடலை நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று இளையராஜாவிடம் கேட்டபோது, உடனே சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையை சொன்னேன். அவரும் உடனே யுவனை அழைத்துப் பாட வைத்தார். மும்பை பாடகி ஸ்ரீஷா இணைந்து அவர் பாடியிருக்கிறார் என்றார்.

Related Stories

No stories found.