ஜஸ்ட் சின்ன ஸ்லிப் தான்... கைதுக்குப் பின் டிடிஎஃப் வாசனின் கூல் பேட்டி!

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

நான் ஸ்டண்ட் செய்யவில்லை. ஜஸ்ட் சின்ன ஸ்லிப் தான். அப்படி கீழே விழும் போது வண்டி தூக்கி விட்டது என கைதுக்கு பிறகு யூடியூபர் டிடிஎஃப் வாசன் பேட்டி கொடுத்துள்ளார்.

ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக் சாகசம் செய்து வந்த பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், நேற்று முன் தினம் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பைக்கில் சாகசம் செய்யும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் தனது பைக்கில் வீலீங் செய்தார். அப்போது பைக் தடுமாறி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வாசன் தூக்கி வீசப்பட்டது மட்டுமல்லாமல் பைக்கும் பலமுறை உருண்டது.

வாசன்
வாசன்

இதில் டிடிஎஃப் வாசன் அதிர்ஷ்டவசமாக, காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர்.

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

இந்நிலையில் காஞ்சிபுரம் போலீஸாரும் 4 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு வழக்குப் பதிவு செய்தனர். உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார், வாசன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தமிழக காவல் துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.

கைதுக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள டிடிஎஃப் வாசன், “அது தெரியாமல் நடந்த சின்ன விபத்து தான். அந்த விபத்தே நடந்து இருக்க தேவையில்லை. நான் ஸ்டண்ட் எதுவும் செய்யவில்லை. ஜஸ்ட் சின்னதா ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டேன். அப்படி விழும் போது வண்டி தானாகவே தூக்கிடுச்சு” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in