உன் வாழ்க்கை உன் கையில்!: நடிகர் ரஜினியின் நம்பிக்கை தரும் வாழ்த்து

உன் வாழ்க்கை உன் கையில்!: நடிகர் ரஜினியின்  நம்பிக்கை தரும் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், நம்பிக்கையூட்டும் வகையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டு பிறந்துள்ளதால் நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் கொண்டாட்ட மனநிலையை கரோனா முடக்கியிருந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த பயமின்றி புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த புத்தாண்டு வரவேற்கும் வகையில் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், "உன் வாழ்க்கை உன் கையில்" என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதே போன்று நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in