இளம் வீரர்களைக் காப்பது நம் அனைவரின் கடமை: பிரியாவின் மறைவிற்கு ஜி.வி.பிரகாஷ் உருக்கமான பதிவு

இளம் வீரர்களைக் காப்பது நம் அனைவரின் கடமை: பிரியாவின் மறைவிற்கு ஜி.வி.பிரகாஷ் உருக்கமான பதிவு

இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்கள். அவர்களைக் காப்பது நம் அனைவரின் கடமை என்று கால்பந்தாட்ட வீராங்களை பிரியாவிற்கு மறைவிற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா( 17). கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட பிரியா பல சாதனைகளைப் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அறுவை சிகிச்சை செய்தும் அவரது கால் வலி குறையாததால் மேல் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா சேர்க்கப்பட்டார்.

அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து பிரியாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் தங்கள் மகள் உயிரிழந்தார் என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கால்பந்து வீராங்களை பிரியா மறைவு குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," 'என் Game என்னை விட்டு போகாது, Come back குடுப்பேன்'. தங்கை பிரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in