உலக அரங்கில் நுழைகிறார் லிடியன்: வெளியாகிறது சுயாதீன ஜாஸ் ஆல்பம் `குரோமாடிக் கிராமாடிக்’

உலக அரங்கில் நுழைகிறார் லிடியன்: வெளியாகிறது சுயாதீன ஜாஸ் ஆல்பம் `குரோமாடிக் கிராமாடிக்’

இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், தனது முதல் சுயாதீன ஜாஸ் ஆல்பம் மூலம் உலக அரங்கில் நுழைகிறார்.

இசை அமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகன் லிடியன் நாதஸ்வரம். இளம் வயதில் இசையில் பல்வேறு சாதனை படைத்து வரும் இவர், மோகன்லால் நடிக்கும் மலையாள படத்துக்கு இசை அமைத்து வருகிறார். இவர் இப்போது சுயாதீன ஜாஸ் ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ’குரோமாடிக் கிராமாடிக்' என்ற இந்த இசை ஆல்பத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இது பற்றிப் பேசிய லிடியன், "உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன்" என்றார்.

வரும் 21 -ம் தேதி உலக இசை தினத்தை முன்னிட்டு இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த ஆல்பம் பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் லிடியன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in