‘நீங்கள் சேவை செய்ய வேண்டாம்’- ‘வாரிசு’ வம்சியிடம் வம்பளக்கும் நெட்டிசன்கள்!

வம்சி பைடிபள்ளி
வம்சி பைடிபள்ளி

’வாரிசு’ படத்திற்கு எதிரான ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ள வம்சிக்கு தங்கள் எதிர்ப்பை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘வாரிசு’ படம் வெளியானது. வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பரவலான எதிர்மறை விமர்சனங்களை அதிகம் பார்க்க முடிந்தது. குறிப்பாக, சீரியல் போல இருக்கிறது எனவும் பலமுறை பழக்கப்பட்ட காட்சிகளே மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அதிகமான விமர்சனங்களைப் பார்க்க முடிந்தது. இந்த ட்ரோல்களுக்கு தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் கொடுத்திருந்தார் வம்சி.

அதில் அவர் பேசியிருந்ததாவது, “படம் வருவதற்கு முன்பே பலரும் தங்கள் கற்பனையில் படம் குறித்தான கருத்துகளை கொண்டிருக்கின்றனர். முதலில் படம் வரட்டும். அதைப் பார்த்து கொண்டாடுங்கள். ஏனெனில், இதுபோன்ற படத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பது தெரியுமா? எத்தனை பேர் தங்கள் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? இது ஜோக் கிடையாது. இயக்குநரும், நடிகரும் அவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்கள்” என பேசி இருக்கிறார். மேலும், படம் சீரியல் போல இருக்கிறது என்பதற்கு சீரியல் என்றால் அவ்வளவு கேவலமா என்பதையும் கேட்டுள்ளார் வம்சி.

Castro

இதற்குத்தான் ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். ’நீங்கள் எதையும் இலவசமாக செய்யவில்லை. உங்கள் வேலைக்கு சம்பளம் தருகிறார்கள். நீங்கள் அப்படி ஒன்றும் சேவையோ தியாகமோ செய்ய வேண்டாம். ஒவ்வொரு வேலையிலும் அழுத்தங்களும் போராட்டங்களும் இருக்கதான் செய்கின்றன. படம் குறித்தான விமர்சனங்களை எதிர்கொண்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். எங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்வது எங்களுக்கும் ஜோக் கிடையாது’ என்ற ரீதியில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in