`ஒரே திரையில் இரண்டு படம் பார்க்கலாம்'- `பிகினிங்' பட இயக்குநர் சொல்லும் தகவல்

`ஒரே திரையில் இரண்டு படம் பார்க்கலாம்'- `பிகினிங்' பட இயக்குநர் சொல்லும் தகவல்

"திரையின் இடது பக்கம் ஒரு படம் ஓடும், வலது பக்கம் ஒரு படம் ஓடும். ஒரே சமயத்தில் இது நடக்கும்" என்று `பிகினிங்' பட இயக்குநர் கூறினார்.

ரசிகர்களை கவர்வதற்காக இளைஞர்கள் புதியதாக ஏதேதோ செய்து வருகிறார்கள். அந்த வகையில், ஜெகன் வித்யா என்பவர் ஒரே ஸ்கீரினில் இரண்டு படங்களை காட்டும் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். படத்தின் பெயர் பிகினிங். இந்தப் படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ஜெகன் வித்யா கூறுகையில், "ஒரே திரையில் இரண்டு படங்களை திரையிடுவதை ஸ்பிலிட் ஸ்கிரீன் என்று சொல்வார்கள். திரையின் இடது பக்கம் ஒரு படம் ஓடும், வலது பக்கம் ஒரு படம் ஓடும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா ஒரு த்ரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும். ஒரே திரையில் ஓடும் இரண்டு கதைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கும். கடைசியில் இரு கதைகளும் ஒன்றாக இணைந்துவிடும். இது உலகிலேயே புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. சில குறும்படங்கள் இதுபோன்று வந்திருக்கிறது. ஒரு முழுநீள திரைப்படமாக ஆசியாவிலேயே புதிய முயற்சி" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in