` நல்ல நண்பர் இனிமேல் என் வாழ்க்கை துணையாக இருப்பார்’-அமீரின் காதலை ஏற்ற பாவ்னி!

` நல்ல நண்பர் இனிமேல் என் வாழ்க்கை துணையாக இருப்பார்’-அமீரின் காதலை ஏற்ற பாவ்னி!

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பட்டம் வென்றதை அடுத்து அமீரின் காதலையும் பாவ்னி ஏற்று கொண்டுள்ளார்.

’ரெட்டைவால் குருவி’, ‘பகல் நிலவு’ உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பாவ்னி. சீரியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தவர் பிக்பாஸ் தமிழின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதே சீசனில் நடன இயக்குநர் அமீரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தார். அங்கேயே இருவருக்குள்ளும் நட்பு உருவானது. தனது அன்பையும் அமீர் அங்கு வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பிக்பாஸ் ஜோடிகள் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருவரும் பங்கு கொண்டனர். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அமீர்-பாவ்னி இருவரும் அந்த சீசனின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இது குறித்து பாவ்னி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்த நிகழ்ச்சியில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருப்பவர், அமீரை குறிப்பிட்டு ‘இது போன்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடனம் தெரியாத எனக்கு பங்கேற்பது என்றால் பயம். ஆனால், எனக்கு பயிற்சி கொடுத்து இவ்வளவு தூரம் கூட்டி வந்த நீங்கள் சிறந்த மாஸ்டர். உங்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள இந்த காலம் உதவியது.

நீங்கள் ஒரு சிறந்த டான்ஸ் மாஸ்டர், நல்ல நண்பர் இனிமேல் என் வாழ்க்கை துணையும் கூட. என்னுடைய சிறந்த வாழ்க்கை துணையாக நீங்கள் இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே என்னவர். ஐ லவ் யூ!’ என தெரிவித்துள்ளார். அமீரும் பாவ்னியின் அன்பை ஏற்றுள்ளார். தொகுப்பாளர் பிரியங்கா, கிருத்திகா என சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in