யோகி பாபு நடிப்பில் அரசியல் காமெடியாக உருவாகும் ’மெடிக்கல் மிராக்கல்’

யோகி பாபு நடிப்பில் அரசியல் காமெடியாக உருவாகும் ’மெடிக்கல் மிராக்கல்’

யோகிபாபு நாயகனாக நடிக்கும் படத்துக்கு 'மெடிக்கல் மிராக்கல்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

காமெடி படங்களான 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்' படங்களை இயக்கிய ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் ஜான்சன்.கே.

மெடிக்கல் மிராக்கல் பூஜையில்
மெடிக்கல் மிராக்கல் பூஜையில்

இதில் நாயகனாக யோகிபாபு நடிக்கிறார். இதில் அவர் ஓலா டிரைவர் வேடத்தில் நடிக்கிறார். தர்ஷா குப்தா நாயகி. மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், சித்தார்த் விபின் உட்பட பலர் நடிக்கின்றனர். மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.

அரசியல் காமெடியாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in