சிவகார்த்திகேயனின் `மாவீரன்’ படத்தில் யோகி பாபு

சிவகார்த்திகேயனின் `மாவீரன்’ படத்தில் யோகி பாபு

நடிகர் யோகிபாபு, சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ படத்தில் இணைந்துள்ளார்.

யோகிபாபு நடித்த 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின், அடுத்து இயக்கும் படம் 'மாவீரன்'. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு மாவீருடு என்று டைட்டில் வைத்துள்ளனர். 'ஆடை', 'மண்டேலா' படங்களுக்கு இசையமைத்த பரத் சங்கர் இசை அமைக்கிறார். விது அயன்னா, ஒளிப்பதிவு செய்கிறார்.

சிவகார்த்திகேயன், இயக்குநர் ஷங்கர், அதிதி ஷங்கர்
சிவகார்த்திகேயன், இயக்குநர் ஷங்கர், அதிதி ஷங்கர்

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார். இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கினும் நடிகை சரிதாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். இதைப் படக்குழு இன்று அறிவித்துள்ளது. யோகிபாபு, மடோன் அஷ்வின் இணைந்த ’மண்டேலா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது ’பிரின்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இதையடுத்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in