குழந்தைகளுடன் திருமண வரவேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தப்போகிறார் யோகி பாபு!

குழந்தைகளுடன் திருமண வரவேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தப்போகிறார் யோகி பாபு!

கரோனாவால் நின்று போன தனது திருமண வரவேற்பை இரண்டு குழந்தைகளுடன் பிரம்மாண்டமாக நடத்த காமெடி நடிகர் யோகி பாபு முடிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக உருவெடுத்தவர் யோகி பாபு. பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் யோகி பாபு, பார்கவி என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்த யோகி பாபு, கரோனாவால் அது தடைபட்டது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் யோகி பாபு - பார்கவி தம்பதிக்கு விசாகன் என்ற மகன் பிறந்தது. இதனிடையே, இரண்டாவது குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார் யோகி பாபு. இந்த நிலையில், கரோனாவால் நின்ற திருமண வரவேற்பை நடத்த யோகி பாபு முடிவு செய்துள்ளார். அதோடு, தனது இரண்டு குழந்தைகளுடன் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறாராம். அதற்கான ஏற்பாடுகளை யோகி பாபு செய்து வருகிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in