மீண்டும் நடிக்க வருகிறார் ராதா?

நடிகை ராதா
நடிகை ராதா

முன்னாள் கதாநாயகி நடிகை ராதா மீண்டும் நடிக்க வருவதாகக் கூறப்படுகிறது.

பிரபல முன்னாள் ஹீரோயின் ராதா. அலைகள் ஓய்வதில்லை, ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, காதல் பரிசு, அம்மன் கோவில் கிழக்காலே உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் ராதா, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார்.

எண்பதுகளில் முன்னணி நடிகையாக இருந்த இவர், திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி விட்டார். அவர் மகள்களான கார்த்திகா, துளசி ஆகியோர் சினிமாவில் நடித்தனர். பின்னர் குடும்ப பிசினஸை கவனிக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் நடிகை ராதாவை மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

தெலுங்குப் பட நடிகர் மகேஷ்பாபு
தெலுங்குப் பட நடிகர் மகேஷ்பாபு

பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு, இப்போது சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அடுத்து த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். பழிவாங்கும் கதையை கொண்ட இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகி. இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடிக்க, முன்னாள் ஹீரோயின் ராதாவிடம் படக்குழு பேசி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. நடிகை ராதா, மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா, சிரஞ்சீவி, மோகன்பாபு உட்பட பலருடன் தெலுங்கில் நாயகியாக நடித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in