‘யசோதா’ வெற்றி: சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவு!

‘யசோதா’ வெற்றி: சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவு!

‘யசோதா’ படத்தின் வெற்றிக் குறித்து நடிகை சமந்தா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த வாரத்தில் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மழை நாளில் கூட ஹீரோயின் சென்ட்ரிக்காக வெளியாகி இருக்கக்கூடிய இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்காகக் கொடுத்திருந்த பேட்டியில் தனது உடல்நிலை சரியில்லாததைப் பற்றி சமந்தா கண்ணீருடன் பேசிய விஷயங்களும் வைரலானது. இந்த நிலையில், ‘யசோதா’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சமந்தா தனது ஜிம் ட்ரைனருடனும், இந்த உடல் நிலை சரியில்லாத சமயத்தில் கூட ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ‘என்னுடைய பிரியமான ஜிலேபியைச் சாப்பிடும் அளவிற்கு நான் வொர்க்கவுட் செய்ய வேண்டும் என என்னுடைய ட்ரைனர் எப்போதுமே சொல்வார். இப்போது ‘யசோதா’ திரைப்படத்தின் வெற்றியை, குறிப்பாக படத்தில் என்னுடைய ஆக்‌ஷன் காட்சிகளுக்காகக் கொண்டாட அவரே எனக்கு கொடுத்திருக்கும் இந்த ஜிலேபி எப்போதுமே ஸ்பெஷலான ஒன்றுதான்.

கடந்த சில மாதங்களாகவே என்னுடைய கஷ்டங்களையும் பலவீனத்தையும் கண்ணீரையும் அதிக அளவிலான ஸ்டிராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்ட சிகிச்சைகளையும் பார்த்தவர்கள் ஒரு சிலர்தான். அவர்கள்தான் என்னை எப்போதும் சோர்ந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

‘யசோதா’ திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in