`கே.ஜி.எஃப்’ ஹீரோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது?

`கே.ஜி.எஃப்’ ஹீரோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது?

கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ் நடிக்கும் அடுத்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகாது என்று கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர் யாஷ். இவர் நடித்த கே.ஜி.எஃப் படங்கள், அவரை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தி இருக்கிறது. கே.ஜி.எஃப் 2 படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தில், இந்தி நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்தனர். பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி களில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வசூல் குவித்துள்ளது.

இந்தப் படத்தை அடுத்து யாஷ் நடிக்கும் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து கன்னட இயக்குநர் நாரதன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் யாஷ். இது அவருக்கு 19-வது படம். இந்தப் படம் குறித்த அப்டேட் வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின. #YashBoss, #Yash19 ஆகிய ஹேஷ்டேக்குகள் திடீரென டிரெண்டாகின.

இந்நிலையில், இதைப் படக்குழு மறுத்துள்ளது. நாரதன் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் படத்தின் அப்டேட் இப்போது வெளியாகாது என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் யாஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in