’கே.ஜி.எப் vs பீஸ்ட்னு சொல்லாதீங்க’: யாஷ்

’கே.ஜி.எப் vs பீஸ்ட்னு சொல்லாதீங்க’: யாஷ்
நடிகர் யாஷ்

’கே.ஜி.எப் vs பீஸ்ட் இல்லை, கே.ஜி.எப் மற்றும் பீஸ்ட் என்று சொல்லுங்கள்’ என நடிகர் யாஷ் கூறினார்.

யாஷ், இந்தி நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள படம், கே.ஜி.எப் சாப்டர் 2. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. நிகழ்ச்சியை பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். யாஷ், சஞ்சய் தத், பிருத்விராஜ், சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கே.ஜி.எப் சாப்டர் 2 - யாஷ்
கே.ஜி.எப் சாப்டர் 2 - யாஷ்

விழாவில் பேசிய நடிகர் யாஷ், ``ஒரே நேரத்தில் கே.ஜி.எப் படமும் விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாவதால், கே.ஜி.எப் vs பீஸ்ட் என நினைக்க வேண்டாம். கே.ஜி.எப் மற்றும் பீஸ்ட் என்றே நம்புகிறேன். ஏனென்றால் இது தேர்தல் அல்ல. ஒருவர் ஒரு ஓட்டுதான் போட வேண்டும் என்று இருந்தால், ஒருவர் வெற்றி பெறுவதும் மற்றொருவர் தோல்வி அடைவதையும் தவிர்க்க முடியாது.

ஆனால், இது சினிமா. ரசிகர்களுக்கு இரண்டு படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. எட்டு மாதங்களுக்கு முன்பே நாங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம். விஜய் சார் படத்துக்கும் அந்த தேதி முக்கியம். அதனால் அவர்கள் முடிவும் நியாயமானதுதான்.

தனிப்பட்ட முறையில் நான் அவர் ரசிகனாக இருக்கிறேன். அவர் பல ஆண்டுகளாக உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அவருடைய படத்தை அனைவரும் கொண்டாடுவோம். அவர் ரசிகர்களும் கே.ஜி.எப் படத்தை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். போட்டி சிந்தனைகளைத் தள்ளி வைத்துவிட்டு, சினிமாவை கொண்டாட வேண்டிய நேரம் இது'' என்றார்.

Related Stories

No stories found.