அருண் விஜய்யின் ‘யானை’ அப்டேட்: படக்குழு புதுத் தகவல்

’யானை’ அருண் விஜய்
’யானை’ அருண் விஜய்

அருண் விஜய் நடிக்கும் ’யானை’ படத்தின் முதல் பாடல், ஜன.13 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் ‘யானை’. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். அருண் விஜய்யும் இவரும் ஏற்கனவே ’மாஃபியா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், நடிகை ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, ’கேஜிஎஃப்’ வில்லன் ராமச்சந்திர ராஜு, இமான் அண்ணாச்சி, புகழ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் டீசர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில், பாம்பன் பாலம், ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், பெரும் துரோகம், ஒரு நட்பு, பெரும் பகை என இயக்குநர் ஹரியின் குரல் ஒலிக்க, கையில் பிள்ளையாருடன் வரும் அருண் விஜய், ரவுடிகளைப் போட்டுப் புரட்டியெடுக்கிகிறார். பிறகு இவருக்கு தூக்கிச் சுமக்கவும் தெரியும் தூக்கிப் போட்டு மிதிக்கவும் தெரியும் என்று வாய்ஸ் ஓவரில் மிரட்டலான அருண்விஜய்யின் லுக்குடன் முடிவது போல டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அதிரடி ஆக்‌ஷன் களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், வரும் 13ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in