பிரபல நடிகையின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்!

பிரபல நடிகையின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்!
யாமி கவுதம்

நடிகை யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்மநபர்கள் முடக்கி உள்ளனர்.

பிரபல இந்தி நடிகை யாமி கவுதம். இவர் தமிழில், ராதாமோகன் இயக்கிய கவுரவம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்துள்ளார். இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வதும் வழக்கம்.

யாமி கவுதம்
யாமி கவுதம்

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தை சிலர் முடக்கிவிட்டதாக நடிகை யாமி கவுதம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ``என் இன்ஸ்டாகிராம் கணக்கை என்னால் செயல்படுத்த முடியவில்லை. அதை யாராவது முடக்கி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அதை விரைவில் மீட்கும் பணியில் இருக்கிறோம். எனது கணக்கில் இருந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தால் கண்டுகொள்ள வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவது வாடிக்கையாக இருக்கிறது. இதற்கு முன் பல நடிகைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டன. இப்போது யாமியின் கணக்கும் முடக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.