`இலவசமாய் வேலை செய்யணும் என்று விரும்புகிறார்கள்'- இளம் இயக்குநர்களின் செயலால் எழுத்தாளர் ராஜேஷ்குமார் வேதனை

எழுத்தாளர் ராஜேஷ்குமார்
எழுத்தாளர் ராஜேஷ்குமார் `இலவசமாய் வேலை செய்யணும் என்று விரும்புகிறார்கள்'- இளம் இயக்குநர்களின் செயலால் எழுத்தாளர் ராஜேஷ்குமார் வேதனை

இளம் இயக்குநர்கள் தான் இலவசமாக வேலை செய்து தர வேண்டும் என விரும்புகிறார்கள் என மூத்த எழுத்தாளரும், க்ரைம் நாவல்களினால் புகழ் பெற்றவருமான ராஜேஷ்குமார் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தன் முகநூலில் எழுதியிருக்கும் ராஜேஷ்குமார், “ஸார்.. என்கிட்ட ஒன்லைன் ஸ்டோரி ஒண்ணு இருக்கு..அதை நீங்க ஜஸ்ட் ஒரு திரைக்கதையாய் உருவாக்கித் தர முடியுமா? என்று இன்றைய இளைய இயக்குநர்களில் நிறைய பேர் கொஞ்சம் கூடத் தயக்கமே இல்லாமல் இலவசமாகக் கேட்கிறார்கள். ஒரு திரைக்கதை அமைப்பது அவ்வளவு சுலபமா என்ன? பொறுமையாய் உட்கார்ந்து ஒரு சிறுகதை எழுதிப் பார்த்தால் தெரியும் அந்த வலி” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு நெட்டிசன்கள் உங்களால் முடியாதா என்ன? எனவும் எதிர்கேள்வி கேட்க, முடியும் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுத்தால்! என பதில் சொல்லியுள்ளார் ராஜேஷ்குமார். படைப்பாளியை அணுகுவதில், பணி செய்யக் கோருவதில் அடுத்த தலைமுறையினருக்கு இருக்கும் மெத்தனத்தை, ஊதியம் வாங்காமல் வேலைவாங்க நினைக்கும் எண்ணத்தை இது காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in