`வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ அடுத்து ஓடிடியில் களமிறங்கும் ஜெயமோகன்!

`வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ அடுத்து ஓடிடியில் களமிறங்கும் ஜெயமோகன்!

‘வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களுக்குப் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணிபுரிந்த பிறகு எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை திரைப்படமாக உள்ளது.

‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களில் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணிபுரிந்த பிறகு எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான ‘ரத்தசாட்சி’ திரைப்படமாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகையில், ‘இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் என்னை அணுகி ‘கைதிகள்’ கதையைத் திரைப்படமாக்க விரும்பினார். இது நடந்து மூன்று மாதங்களுக்குள் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரும் இந்தக் கதையை படமாக்க விரும்பி என்னிடம் பேசினார்கள். ஆனால், இந்தக் கதையை நான் ஏற்கெனவே இயக்குநர் ரஃபிக்கிடம் கொடுத்து விட்டதைத் தெரிவித்தேன்.

இப்போது ‘கைதிகள்’ சிறுகதை ‘ரத்தசாட்சி’யாக மாறி இருக்கிறது. ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதுதான் இந்தப் படத்தின் சாரம்’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ்குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படம் விரைவில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in