புடவை முழுவதும் போர்வாள் : த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உருவத்துடன் 'பொன்னியின் செல்வன்' பட்டுப்புடவை

புடவை முழுவதும் போர்வாள் : த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உருவத்துடன் 'பொன்னியின் செல்வன்' பட்டுப்புடவை

இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் படங்களுடன் பட்டுப்புடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பெண்கள் மத்தியில் ஏக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக து 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாகி வருகிறது. எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் தற்போது எடுத்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ாஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கிற்கு வர உள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இதனால் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை அப்படியே புடவையில் நெய்து அசத்தியுள்ளனர். முன்னதாக 'சந்திரமுகி' புடவை, சாமுத்திரிகா புடவை என பல புடவைகள் பிரபலமாகி வந்த நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன்' புடவையும் இடம் பிடித்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில் த்ரிஷா(குந்தவை), ஐஸ்வர்யாராய்(நந்தினி) ஒருவம் பொறிக்கப்பட்ட பார்டரும், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் , பிரபு ஆகியோரின் படங்கள் முந்தியிலும் இடம் பெற்றுள்ளன. புடவை முழுவதும் போர் வாள் உள்ளது.

இந்த தீபாவளிக்கு டிரெண்டாகும் வகையில் 'பொன்னியின் செல்வன்' பட்டுப்புடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புடவையை வாங்க பெண்கள் ஆர்வலம் காட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in