`அவர்தான் முக்கிய காரணம்'- நெம்மேலி தர்காவில் குடும்பத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

நெம்மேலி தர்காவின் 349-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்துடன் பங்கேற்றுச் சிறப்பு வழிபாடு செய்தார். இது அப்பகுதி முஸ்லிம்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ளது நெம்மேலி கிராமம். இங்குள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் அருகில் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 349-வது வருட கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அவருடன் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைக் கோவளம் இளைஞர் அணி மற்றும் முஸ்லிம் மீனவ சமுதாய மக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நெம்மேலி பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், “இப்பகுதியில் தர்கா அமைக்க வேண்டும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுதலாக இருந்திருக்கிறது. தர்கா கட்டுமான பணிக்கு அவர் பெருமளவு நன்கொடை அளித்திருக்கிறார். நெம்மேலி தர்கா பிரபலமானதற்கு அவர்தான் முக்கியமான காரணம்“ என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in