உலக அளவில் 'கடைசி விவசாயி' 2-வது இடம்: `விக்ரம்' எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

உலக அளவில் 'கடைசி விவசாயி' 2-வது இடம்: `விக்ரம்' எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

உலக அளவில் சிறந்த படங்களை வரிசைப்படுத்தும் லெட்டர் பாக்ஸ்டு (Letterboxd) பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி' திரைப்படம்.

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தில் நல்லாண்டி என்பவர் விவசாயியாக நடித்திருந்தார். அவரது நடிப்பு யதார்த்தமான விவசாயி ஒருவரை பிரதிபலித்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் அந்த அளவுக்கு வசூலில் சாதிக்கவில்லை.உலக அளவில் சிறந்த படங்களை வரிசைப்படுத்தும் லெட்டர் பாக்ஸ்டு (Letterboxd) பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி' திரைப்படம்.

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தில் நல்லாண்டி என்பவர் விவசாயியாக நடித்திருந்தார். அவரது நடிப்பு யதார்த்தமான விவசாயி ஒருவரை பிரதிபலித்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் அந்த அளவுக்கு வசூலில் சாதிக்கவில்லை.

இருப்பினும் 'கடைசி விவசாயி' படத்தை பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம், தற்போது மற்றொரு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் ஒன்றாக லெட்டர் பாக்ஸ்டு (Letterboxd) என இணையதளம், 2022-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான, ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்தப் படங்களை பட்டியலிட்டிருக்கிறது. அந்த வகையில், விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி விவசாயி' திரைப்படம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த படங்களின் பட்டியலில் ராஜமௌலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் 6-வது இடத்தையும், கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் 11-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in