
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ரத்னகுமார் இயக்கும் 'குலுகுலு' என்ற புதிய திரைப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தானம். கதாநாயகர்களின் நண்பனாக பல படங்களில் நடித்து வந்த நகைச்சுவை நடிகரான சந்தானம் திடீரென ஹீரோவானார். தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 'ஏஜென்ட் கண்ணாயிரம்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதையடுத்து விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ரத்னகுமார் இயக்கும் 'குலுகுலு' திரைப்படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்கிறார். ஏற்கெனவே 'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்களை ரத்னகுமார் இயக்கியுள்ளார். சந்தானம் நடிக்கும் இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 'குலுகுலு' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.