நண்பனிடம் கூட சாதி பார்ப்பீர்களா?: சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து

நண்பனிடம் கூட சாதி பார்ப்பீர்களா?: சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து

ஆசிரியர் தினமான இன்று, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய கவிதை சர்ச்சையில் சிக்கியுள்ளது.

நாடு முழுவதும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நாளில் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " ஆசான்கள் ஆயிரம்பேர். எழுத்தறிவித்தவர் மட்டுமல்லர், ஏர்பிடிக்கக் கற்றுக்கொடுத்தவரும் என் ஆசான்தான். நியூட்டன் மட்டுமல்ல, நீச்சல் கற்றுத்தந்த தலித் நண்பனும் என் ஆசான்தான். நற்றிணை மட்டுமல்ல, நாட்டார்மொழி கற்றுத்தந்த பாமரனும் என் ஆசான்தான். உலகம் வகுப்பறை. ஆசிரியர்களே வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.இதில் நீச்சல் கற்றுக்கொடுத்த தலித் நண்பன் எனும் வாசகம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. நண்பனிடம் கூட தலித் என சாதி வேறுபாடு பார்ப்பீர்களா என பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in