`தளபதி அய்யா’: நடிகர் விஜய்யை கிண்டல் செய்தாரா? கமல்ஹாசன்

`தளபதி அய்யா’: நடிகர் விஜய்யை கிண்டல் செய்தாரா? கமல்ஹாசன்

நீண்ட இடைவெளிக்குப் பின் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் `விக்ரம்' திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 3-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. குறைந்த நாட்களே உள்ளதால் உலகம் முழுக்க ‘பறந்து பறந்து’ படத்தை புரமோஷன் செய்யும் பணியில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.

மலேசியாவில் நடைபெற்ற பட புரமோஷன் விழாவில் கமல்ஹாசனிடம், அங்குள்ள பத்திரிகையாளர்கள் தளபதியுடன் எப்ப நடிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ‘தளபதி அய்யாவோட’ கால்ஷீட் கிடைச்சா பண்ணிரலாம் என ஜாலியாக பதில் அளித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பங்கேற்றனர். அப்போது கமல்ஹாசனிடம் மீண்டும் ரஜினியுடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என கமல்ஹாசன் ஒருவாறு சமாளித்து பதில் அளித்தார். இருவரும் சம கால நடிகர்கள் மற்றும் நண்பர்கள் என்பதால் அப்போது கமல்ஹாசன் மென்மையாக பதில் அளித்தார். ஆனால் நடிகர் விஜய் அடுத்த தலைமுறை நடிகர். எனினும், ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையாக உலகம் முழுவதும் நடிகர் விஜய்யும் பெரும் ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார். அதை வைத்து கமல்ஹாசனிடம் மலேசிய பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்,

அதற்கு கமல்ஹாசன் ‘தளபதி அய்யா’ என கூறிய வார்த்தைகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கமல்ஹாசன் பதில் ஜாலியானதா அல்லது நடிகர் விஜய்யை கிண்டலடித்தாரா என்பது வரும் நாட்களில் விஜய் ரசிகர்கள் அளிக்கும் பதிலிருந்து தெரியவரும்.

இப்போதைக்கு விஜய் ரசிகர்களின் சமூக ஊட பக்கங்கள் அமைதிகாத்து வருகின்றன. வரும் நாட்களில் ஆதரவு, எதிர்ப்பு போன்ற கலவையான ‘சூடான’ பதில்களை எதிர்பார்க்கலாம். அவை எப்படி இருந்தாலும் அது கமல்ஹாசனின் `விக்ரம்' திரைப்பட புரமோஷனுக்கு பக்க பலமாக அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in