வைரலாகும் போட்டோ... தோனி தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் யோகிபாபு?

தோனியுடன் விக்னேஷ் சிவன், யோகிபாபு
தோனியுடன் விக்னேஷ் சிவன், யோகிபாபு

விக்னேஷ் சிவன், தோனி, யோகிபாபு மூவரும் சமீபத்தில் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

கிரிக்கெட்டர் தோனி IPL 2023 வெற்றிக்குப் பிறகு விளம்பரப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பிலும் தோனி ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவரது தயாரிப்பில் முதல் படமாக ஹரீஷ் கல்யாண் நடிப்பில் 'லெட்ஸ் கெட் மேரீட்' என்ற படம் வெளியானது. ஆனால், படம் சுமாரான விமர்சனங்களையே பெற்று தோல்வி அடைந்தது. இருந்தாலும் அடுத்தடுத்து படத்தயாரிப்பில் தோனி கவனம் செலுத்தி வருகிறார்.

தோனி, யோகிபாபு, விக்னேஷ் சிவன்...
தோனி, யோகிபாபு, விக்னேஷ் சிவன்...

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு விக்னேஷ் சிவன், தோனி ஆகியோர் சமீபத்தில் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் ஒருமுறை தோனியை விளம்பர படம் ஒன்றிற்காக இயக்கினார்.

தோனி தயாரிப்பில் யோகிபாபு 'லெட்ஸ் கெட் மேரீட்' படத்தில் நடித்துள்ளார். இவர்கள் மூவருக்கும் இடையில் நல்ல நட்பு இருப்பதால் விரைவில் தோனி தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்க இருக்கிறாரா என ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in