‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிக்கிறாரா விஜயகாந்த்? - பிரேமலதா விளக்கம்

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிக்கிறாரா விஜயகாந்த்? - பிரேமலதா விளக்கம்

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் நடிக்கவுள்ளார் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

“விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியைப் பார்த்து வியந்தேன். அது தவறான செய்தி. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார். ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக முடிவானால், கட்சியின் தலைமைக் குழு மூலம் அதிகாரபூர்வமாக அத்தகவலை அறிவிப்போம்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in