அவர்களைப் பற்றி அவர்களே அசிங்கமாக பேசச்சொல்வார்களா?: நடிகர் சதீஷ்க்கு பதிலடி கொடுத்த நடிகை

  தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

ஆடை கலாச்சாரம் குறித்து நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கு நடிகை தர்ஷா குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த படத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் சதீஷ்.
நடிகர் சதீஷ்.

இந்த விழாவில் நடிகர் சதீஷ் பேசுகையில், " பாம்பேயிலிருந்து வந்திருந்த சன்னி லியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்துள்ளார். ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்துள்ளார்" என்று பேசினார். இவரின் பேச்சுக்கு 'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன், பாடகி சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ்  உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

இதையடுத்து அதற்கு நடிகர் சதீஷ் விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில்," நான் பேசியது தர்ஷா குப்தா அவர்களின் அனுமதியுடன் நகைச்சுவைக்காக பேசினேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால், நடிகர் சதீஷின் வீடியோவிற்கு நடிகை தர்ஷா குப்தா மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்," நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகிறார். இது மிகவும் விசித்திரமான ஒன்று. யாராவது அவர்களைப் பற்றி அவர்களே மேடையிலே அசிங்கமாக பேச சொல்வார்களா? எனக்கும் நீங்கள் அன்று பேசியது மிகவும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் நான் அதை பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது இப்படி மாற்றி சொல்வது சரியல்ல" என்று சதீஷை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in