தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்டார்

வில் ஸ்மித்
வில் ஸ்மித்

நிகழ்ச்சித் தொகுப்பாளரை அடித்த நடிகர் வில் ஸ்மித், கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார்.

ஆஸ்கர் விருது விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்-டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார். 1997-ம் ஆண்டு வெளியான ‘ஜி.ஐ ஜேன்’ என்ற படத்தில் டெமி மூர் மொட்டையடித்து நடித்திருப்பார். அதை ஒப்பிட்டுப் பேசினார் ராக். ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டதால் மொட்டை அடித்துள்ளார்.

கிறிஸ் ராக்கை அடிக்கும் வில் ஸ்மித்
கிறிஸ் ராக்கை அடிக்கும் வில் ஸ்மித்

இந்த நிலையில், மனைவி பற்றி கிண்டலாக கிறிஸ் ராக் பேசியதை தாங்கிக் கொள்ளாத வில் ஸ்மித், மேடையேறிச் சென்று, அவர் கன்னத்தில் வேகமாக அறைந்தார். “என் மனைவியின் பெயரை இனி உச்சரிக்காதே” என்றும் கத்தினார் ஸ்மித். “நகைச்சுவைக்காகவே அப்படிச் சொன்னேன்” என்றார் கிறிஸ் ராக். இதனால் அரங்கில் இருந்த சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவி ஜடா பிங்கெட்-டுடன் வில் ஸ்மித்
மனைவி ஜடா பிங்கெட்-டுடன் வில் ஸ்மித்

விருது பெற்றதும், இந்தச் சம்பவத்திற்காக. வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார். அவர் பேசும்போது, “அகாடமியிடமும் என் சகாக்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது ஓர் அழகான தருணம். விருது கிடைத்த மகிழ்ச்சியில் நான் அழவில்லை. கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. ரிச்சர்ட் வில்லியம்ஸ் (செரினா, வீனஸ் சகோதரிகளின் தந்தை) பற்றி அவர்கள் கூறியது போல், நான் பைத்தியக்கார தந்தையைப் போல் இருக்கிறேன். இந்த ஆகாடமி என்னை மீண்டும் அழைக்கும் என்று நம்புகிறேன்” என்று சொன்னார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in