தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்!- ஆஸ்கர் விழாவில் பரபரப்பு

கிறிஸ் ராக்-கை அறையும் வில் ஸ்மித்
கிறிஸ் ராக்-கை அறையும் வில் ஸ்மித்

நிகழ்ச்சித் தொகுப்பாளரின் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் அறைந்ததால் ஆஸ்கர் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்ட இந்த விழாவை, இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்த விருது விழாவில், சிறந்த படமாக ’கோடா’ (Coda) தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, காட்சி அமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ’டியூன்’ படம் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.

விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக் ஜாலியாக பேசி கொண்டிருந்தார். அவர், நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் மேடையேறிச் சென்று, கிறிஸ் ராக்கை கன்னத்தில் வேகமாக அறைந்துவிட்டுத் திரும்பினார்.

’என் மனைவியின் பெயரை இனி உச்சரிக்காதே’ என்று கத்தினார் வில் ஸ்மித். தான் நகைச்சுவைக்காகவே அப்படிச் சொன்னேன் என்றார் கிறிஸ் ராக். இதனால் அரங்கில் இருந்த சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in