`அந்த பளார் சம்பவம் ஏற்புடையதல்ல’: தனது செயலுக்கு மீண்டும் வருந்தும் வில் ஸ்மித்

`அந்த பளார் சம்பவம் ஏற்புடையதல்ல’: தனது செயலுக்கு மீண்டும் வருந்தும் வில் ஸ்மித்

``ஆஸ்கர் மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தது ஏற்புடையது அல்ல'' என்று நடிகர் வில் ஸ்மித் மீண்டும் வருந்தியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு ’கிங் ரிச்சர்ட்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இந்த விழாவில் தனது மனைவி ஜடா பிங்கெட்டுடன் பங்கேற்றார் வில் ஸ்மித்.

நிகழ்ச்சியை தொகுத்த காமெடி நடிகர் கிறிஸ் ராக், ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிண்டல் செய்து பேசினார். ஆத்திரமடைந்த வில் ஸ்மித், கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்த வில் ஸ்மித், ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்துக்காக, கிறிஸ் ராக்கிடம் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை என்று ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அவர் பேச மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது செயல் எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை என்று மீண்டும் கூறியுள்ள வில் ஸ்மித், இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவருடன் பேச எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in