கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லை: விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை உதறித்தள்ளிய சாய்பல்லவி?

சாய்பல்லவி
சாய்பல்லவிகதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லை: விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை உதறித்தள்ளிய சாய்பல்லவி?

‘லியோ’ படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகை சாய்பல்லவி நடிக்க மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை சாய்பல்லவி மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வாய்ப்பே பின்பு த்ரிஷாவுக்கு சென்றுள்ளது. ‘லியோ’ படப்பிடிப்புத் தற்போது காஷ்மீரில் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் காஷ்மீர் ஷெட்யூலை முடித்து விட்டு ‘லியோ’ படக்குழு சென்னை திரும்ப இருக்கும் நிலையில், ‘லியோ’ பட வாய்ப்பை சாய்பல்லவி தவிர்த்ததற்கான காரணமும் வெளியாகியுள்ளது. இந்தக் கதையில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்கு போதிய முக்கியத்துவம் இல்லை என சாய்பல்லவி நடிக்க மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, இதற்கு முன்பு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ படத்திலும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கும்படி சாய்பல்லவியிடம் முதலில் கேட்கப்பட்டது. ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கும் இதே காரணம் சொல்லி மறுத்திருக்கிறார் சாய்பல்லவி. ஆனால், இது குறித்து சாய்பல்லவி தரப்போ அல்லது படக்குழு தரப்போ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெளிவுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in