
ப்படம் 'லியோ' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராக் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த அந்த படத்திற்கு சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் விஜய் போஸ்டரில் புகைபிடிப்பது போன்று இருந்தது சர்ச்சை எழுந்தது. பின்பு பாடல் வரிகளில் இடம் பெற்றுள்ள போதைப்பழக்கம், டீசரின் சர்ச்சை வசனங்கள் என அடுத்தடுத்து விஜய் படத்திற்கு சிக்கலாக அமைந்தது.
மேலும் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் அனுமதி வேண்டும் என தயாரிப்பு தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கான விசாரணை நாளை காலை நடக்க இருக்கிறது. மேலும் தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளில் இதுவரை இன்னும் முன்பதிவு தொடங்காமல் உள்ளது. இந்த நிலையில், ' 'லியோ' படத்தின் முதல் வார கலெக்ஷனில் 75% தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திற்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூகத்தீர்வு எட்டப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்திற்குக் காத்திருக்கும் ரசிகர்கள் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என பதைபதைப்பில் காத்திருக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!