
‘லியோ’ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி, உள்துறை செயலாளரிடம் படத்தயாரிப்பாளர் தரப்பு மனு அளித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சிகளை வெளியிட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி அரசிடம் தயாரிப்புத் தரப்பு விண்ணப்பித்தது. அதன்படி, அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதிவரை சிறப்புக் காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு அரசாணை வெளியிட்டது. இதற்குப் பிறகு, மற்றும் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் காட்சிகள் காலை 9 மணிக்குத் துவங்கி இரவு 1.30 மணிக்குள் நிறைவுபெற வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
இதனால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தயாரிப்புத் தரப்பு அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து, அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி கோரி படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் காட்சியைத் திரையிட அனுமதித்துவிட்டு, அதற்கான நேரம் வழங்காவிட்டால் எப்படித் திரையிட முடியும் எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்தார். ஆனால், 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அரசிடம் விண்ணப்பிக்க தயாரிப்புத் தரப்புக்கு உத்தரவிட்டார். இது குறித்து நாளை மதியம் ஒன்றரை மணிக்குள் அரசு முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சூழலில் இன்று தமிழக உள்துறை செயலாளரை சந்தித்த ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரி மனு அளித்தது. இதனைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் தரப்பு, “காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி, நீதிமன்ற உத்தரவின் நகலையும் அளித்துள்ளோம். இன்றைக்குள் முடிவு எடுத்து அறிவிப்பதாக கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்
பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!
தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!