விஜய்யுடன் நிச்சயமாக இணைந்து நடிப்பேன்: அடித்துச் சொல்லும் நடிகர் விக்ரம்

விஜய்யுடன் நிச்சயமாக இணைந்து நடிப்பேன்: அடித்துச் சொல்லும் நடிகர் விக்ரம்

``எதிர்காலத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது உறுதி" என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் 7 வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயாகியாக நடிக்கும் இப்படத்தில், இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தியான இன்று இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், பட குழுவினர் ட்விட்டரில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. அப்போது, ரசிகர்களுடன் உரையாடிய நடிகர் விக்ரம், நடிகர் விஜய் பற்றி பெருமையாக பேசினார். விஜய்யின் நகைச்சுவை உணர்வை தனக்கு பிடிக்கும் என்றும் அவர் மிகச் சிறந்த நடிகர் என்றும் கடினமான நடன அசைவுகளையும் எளிமையாக விஜய் ஆடுவதை கண்டு jhd; தான் ஆச்சரியமடைவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இயக்குநர் அஜய் ஞானத்தின் இயக்கத்தில் நான் நிச்சயமாக நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in