நவீன் பொலிஷெட்டியுடன் ஜோடி சேருகிறாரா அனுஷ்கா?

நவீன் பொலிஷெட்டியுடன் ஜோடி சேருகிறாரா அனுஷ்கா?
அனுஷ்கா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா. கடந்த 2020-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘நிசப்தம்’ திரைப்படத்திற்குப் பிறகு வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமலிருந்த அனுஷ்கா, தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு என்பவர் இயக்கத்தில் தயாராகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தில் நாயகனாக நவீன் பொலிஷட்டி நடிக்கவுள்ளார். சமீபமாகத் தெலுங்கு சினிமா உலகில் நவீன் பொலிஹெட்டி தேர்ந்தெடுக்கும் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதைக்களங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. 2019-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படம் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது இத்திரைப்படம் தமிழில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் சந்தானம் நடிக்கிறார்.

நவீன் பொலிஷெட்டியும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளார்களா என்று அறிவிக்கப்படவில்லை. இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லை என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்துவருகின்றனர். காரணம், நவீன் பொலிஷெட்டியின் வயது 32. அனுஷ்காவுக்கு 40. ஆகவே கண்டிப்பாக இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in