டெல்லியில் சந்திப்பார்களா விஜய் - அஜித்?

டெல்லியில் சந்திப்பார்களா விஜய் - அஜித்?

‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்போது டெல்லியில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்கே சென்றுள்ளார். தமிழ்நாட்டிலிருக்கும் போது அவ்வளவாக பொது இடங்களுக்குச் செல்லாத அஜித், டெல்லியில் தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்த்து அங்கே ஹிந்தி, தமிழ் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதுபோக, 365 நாட்களில், 5 கண்டங்களில் உள்ள 25 நாடுகளை பைக்கில் சுற்றி சாதனை புரிந்த மரல் யாசர்லூ என்ற பெண்மணியைச் சந்தித்து, தான் அடுத்து பைக்கில் மேற்கொள்ளவிருக்கும் உலக சுற்றுலா பற்றி ஆலோசனையைக் கேட்டார் அஜித்.

அஜித்துடன் மரல் யாசர்லூ
அஜித்துடன் மரல் யாசர்லூ
 மரல் யாசர்லூ
மரல் யாசர்லூ

அஜித் டெல்லியிலிருக்கும் இதேசமயம், ‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்காக டெல்லி செல்கிறார் விஜய். இதைத் தொடர்ந்து, விஜயும் அஜித்தும் டெல்லியில் சந்தித்துக் கொள்வார்கள் என்ற செய்தி கிளம்பியுள்ளது. அஜித் விஜய் சந்திப்பை, தமிழ் திரைத் துறையில் இருவேறு துருவங்களாக இருக்கும் அவர்களின் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.