`கலைஞர் 100’ விழாவில் பங்கேற்கிறாரா அஜித்... புகைப்படத்தால் வெளியான உண்மை!

நடிகர் அஜித், முன்னாள் முதல்வர் கருணாநிதி.
நடிகர் அஜித், முன்னாள் முதல்வர் கருணாநிதி.

’கலைஞர் 100’ விழாவிற்கு நடிகர் அஜித்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த கேள்விக்கான பதில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் மூலம் அது தெரிய வந்துள்ளது.

தமிழ்த் திரையுலகிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வகையில் தமிழ்த் திரையுலகம் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நாளை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக, ஜனவரி 6-ம் தேதிக்கு விழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவுக்காக தமிழின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டி ரேஸ் கோர்ஸில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் தெலுங்குத் திரையுலகில் இருந்து சிரஞ்சீவி, கன்னடத் திரையுலகில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத் திரையுலகில் இருந்து மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்தித் திரையுலகில் இருந்தும் பல நடிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்த விழாவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அஜித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்போது அவர் நிகழ்வில் பங்கேற்பாரா இல்லையா என்ற தகவல் ஒரு புகைப்படம் மூலம் வெளியாகியுள்ளது.

அதாவது, சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றைவைத்து நடிகர் அஜித் சென்னை வந்தடைந்து விட்டதாகவும் அவர் ‘கலைஞர் 100’ விழாவில் பங்கேற்பார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இன்னொரு தரப்பினர், விஜயகாந்த் இறப்புக்கு நேரில் வரமுடியவில்லை, அங்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டுவிட்டு இப்போது மட்டும் எதற்காக வருகிறார்? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிரடி! தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம்!

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை... காங்கிரஸ் கடும் கோபம்!

ஓடும் காருக்குள்ளேயே நடந்த கல்யாணம்! சினிமாவை விஞ்சிய காதல் ஜோடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in