`ஆர்ஆர்ஆர்' மீது ஏன் இப்படி கோபம்?

`ஆர்ஆர்ஆர்' மீது ஏன் இப்படி கோபம்?

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான ஆர்ஆர்ஆர் சமீபமாக தலைப்புச் செய்தியாக வலம் வருகிறது. இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர் ஒருவர், ‘சென்னையில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ஒரு தியேட்டரில் 5 மணி காட்சி ரத்து. மற்ற காட்சிகளும் புக்கிங்கில் ஈ ஆடுகிறது. படம் நன்றாக இருந்தால்தான் அடுத்த இரண்டு தினங்கள் தேறும்’ என்று தகவல் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, கர்நாடகாவில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகாததற்கு அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், கர்நாடக ரசிகர்கள் ட்விட்டரில் #BoycottRRRinKarnataka என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இன்று மதியத்தில் இருந்து ஏராளமான சமூக ஊடகப் பயனர்கள் ட்விட்டர் தளத்திற்குச் சென்று #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்வீட் செய்து வருகின்றனர். அதில், கர்நாடகாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கன்னட மொழியில் வெளியாகவில்லை என்றும், இது கன்னடர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்தி மற்றும் தமிழில் மட்டும் முன்பதிவு காட்டும் செயலியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த ஒரு பயனர், “இது கன்னடர்களுக்கு பெரும் அவமானம். கர்நாடகாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தடை செய்யும் நேரம் இது. படம் கன்னடத்தில் இருந்தால் மட்டுமே வரவேற்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in