'கருப்பு வண்ணத்தை விரும்புவது ஏன்?'

ஸ்ருதி சொல்லும் ரகசியம்
'கருப்பு வண்ணத்தை விரும்புவது ஏன்?'
ஸ்ருதி ஹாசன்

கருப்பு வண்ணத்தை தான் விரும்புவது ஏன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், ஸ்ருதிஹாசன். அவர் நடித்த 'பெஸ்ட்செல்லர்' என்ற வெப்சிரீஸ் அமேசானில் வெளியாகி இருக்கிறது. அவர், இப்போது பிரபாஸுடன் 'சலார் என்ற பான் இந்தியா' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியில் அதிக வாய்ப்பு வந்தாலும் நான் தென்னிந்திய நடிகைதான். தென்னிந்திய திரைப்படங்கள்தான் எனக்கு தாய்வீடு. இந்தியில் நடிகையாக அறிமுகமானாலும் நான் நடித்த தமிழ், தெலுங்குப் படங்கள்தான் அதிக ஹிட்டாகி இருக்கின்றன.

மனித உணர்வுகளை இணைக்கின்ற எந்த கதையையும் பான் இந்தியா படமாக்கலாம். நான் பான் இந்தியா சூழலில் வளர்ந்தவள். என் அம்மாவும், அப்பாவும் வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள். நான் படித்த பள்ளியில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருந்தார்கள். அதனால் மனித உணர்வுகளின் இணைப்புதான் பான் இந்தியாவுக்கு முக்கியம்.

நான் நடிக்கும் பான் இந்தியா படமான ’சலார்’, மொழி கடந்த பார்வையாளர்களால் பார்க்கப்படும் என்று நம்புகிறேன். பிரபாஸுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க இருக்கிறேன். அவர் ஒரு ஜாம்பவான். அவருடன் பணியாற்ற இருப்பது உற்சாகம் அளிக்கிறது.

நான் ஏன் கருப்பு உடைகளை அதிகம் தேர்வு செய்கிறேன் என்று கேட்கிறார்கள். கருப்பு பிடிக்கும். இசையில் கூட, கோத் இசைக் குழு (பெரும்பாலும் கருப்பு உடை அணிந்து இயங்கும் இங்கிலாந்து இசைக்குழு) எனக்குப் பிடிக்கும். புடவையில் கூட கருப்பைதான் தேர்வு செய்வேன்.

இவ்வாறு ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.