'நாட்டு நாட்டு’ போல ’நாக்கமுக்க’ பாடலுக்கு ஏன் ஆஸ்கர் இல்லை?: நடிகர் நகுல் ட்விட்

நடிகர் நகுல்
நடிகர் நகுல்'நாட்டு நாட்டு’ போல ’நாக்கமுக்க’ பாடலுக்கு ஏன் ஆஸ்கர் இல்லை?: நடிகர் நகுல் ட்விட்

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் கொடுத்தது போல ’நாக்கமுக்க’ பாடலுக்கு ஏன் ஆஸ்கர் இல்லை என்ன ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதை நடிகர் நகுல் ட்விட் செய்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு இணையத்தில் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘இந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்குக் கொடுத்த ஆஸ்கரை ஏன் ‘நாக்க முக்க’ பாடலுக்குக் கொடுக்கவில்லை?’ என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ட்விட்டை நடிகர் நகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘’ஆர்ஆர்ஆர்’ படம் ஆஸ்கர் விருது வென்றது மிகவும் பெருமையாக உள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். அதேசமயத்தில் ‘நாக்கமுக்க’ பாடலுக்கு ஏன் ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை என ரசிகர்கள் சிலர் செய்துள்ள ட்விட் என் முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. இதை நான் ஃபாசிட்டிவாகவே எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்தப் பாட்டின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை இந்த ட்விட்டை டேக் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in