கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது ஏன்?- மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது ஏன்?- மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கடந்த 9-ம் தேதி கோலாகலமாக நடந்தது. திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். இதன் பின்னர் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, நடத்தப்பட்ட போட்டோஷூட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, மகாபலிபுரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் கடற்கரைக்கே செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கடற்கரை பொது இடம் என்பதால் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடந்த ஜுன் 9-ம் தேதி அன்று ஏன் பொதுமக்களை அனுமதிக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in