'விடுதலை’ இரண்டு பாகங்களாக வருவது ஏன்?: நடிகர் சூரி விளக்கம்

நடிகர் சூரி
நடிகர் சூரி'விடுதலை’ இரண்டு பாகங்களாக வருவது ஏன்?: நடிகர் சூரி விளக்கம்

‘விடுதலை’ படம் இரண்டு பாகங்களாக உருவானது ஏன் என்பது குறித்து நடிகர் சூரி விளக்கம் கொடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘விடுதலை’ திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. முதலில் ‘விடுதலை’ திரைப்படம் ஒரே பாகமாக உருவாக இருந்தது. பின்பே இரண்டு பாகங்கள் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நடிகர் சூரி கூறுகையில், “விஜய்சேதுபதி நடிக்க இருந்த கோனார் கதாபாத்திரத்தில் முதலில் இயக்குநர் பாரதிராஜா நடிக்க இருந்தது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவரால் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. பின்பே விஜய்சேதுபதி வந்தார். அவர் வந்ததும், படம் பெரிதானது. இரண்டு பாகங்களாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. முதல் பாகத்தில் அவரது போர்ஷன் குறைவாக வரும். ஆனால், இரண்டாம் பாகத்தில் அதிகம் அவரை மையபடுத்தியே கதை நகரும்" எனத் தெரிவித்துள்ளார் சூரி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in