விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?- காரணத்தை சொல்லும் விஷால்!

விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?- காரணத்தை சொல்லும் விஷால்!

நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தக் காரணம் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.

நடிகர் விஷாலின் `லத்தி' திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஷால் ’தளபதி67’ படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்துள்ளது குறித்துப் பேசியுள்ளார். ‘இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தில் நடிகர் விஜய்க்கு என்னை வில்லனாக நடிக்க அழைத்தது உண்மைதான். ஆனால், ஏற்கெனவே படங்களுக்குக் கொடுத்துள்ள கமிட்மென்ட்ஸ் காரணமாக என்னால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை.

மேலும், விஜய்க்கு வில்லன் என்பதைக் காட்டிலும் அவரை இயக்க விருப்பம் உண்டு. சீக்கிரமே என்னுடைய இந்த இரண்டு ஆசைகளும் நடக்கும் என நம்புகிறேன்’ என பதிலளித்துள்ளார் விஷால். மேலும், அவர் இயக்குநராக அறிமுகமாகும் ‘துப்பாறிவாளன் 2’ படத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார் விஷால்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in