’ஆர்ஆர்ஆர்’ சக்சஸ் பார்ட்டி: ஜூனியர் என்.டி.ஆர் மிஸ்சிங்!

’ஆர்ஆர்ஆர்’ சக்சஸ் பார்ட்டி: ஜூனியர் என்.டி.ஆர் மிஸ்சிங்!
ஜூனியர் என்.டி.ஆர்

’ஆர்ஆர்ஆர்’ படக்குழுவுக்கு தயாரிப்பாளர் வைத்த பார்ட்டியில், ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்ளவில்லை.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒலிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். பக்கா கமர்சியல் படமான இது, கடந்த வெள்ளிக்கிழமை பலத்த எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆனது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்

வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். வசூலிலும் சாதனைப் படைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தானய்யா, படம் வெற்றி பெற்றிருப்பதால் படக்குழுவுக்கு சமீபத்தில் பார்ட்டி வைத்திருந்தார்.

ராம் சரண் பிறந்த நாள் விழாவில், ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலி
ராம் சரண் பிறந்த நாள் விழாவில், ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலி

இதில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்ளவில்லை. ஜூனியர் என்.டி.ஆரைவிட ராம் சரணுக்குத்தான் படத்தில் முக்கியத்துவம் இருப்பதாக அவர் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், பார்ட்டியில் அவர் கலந்துகொள்ளாதது சந்தேகத்தை எழுப்பியது. அவர் அப்செட் ஆனதால்தான் பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால், பார்ட்டி நடந்த அன்று, அவர் மனைவி லட்சுமி பிரணதியின் பிறந்தநாள் என்பதால் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்ளவில்லை என்றும் நான்கைந்து வருடங்களாக மனைவி, குழந்தைகளின் பிறந்த நாட்களில் என்.டி.ஆர் வீட்டில் இல்லை. அதனால் இந்த பிறந்த நாளில் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரம், நேற்று நடந்த ராம் சரண் பிறந்தநாள் பார்ட்டியில் அவரும் இயக்குநர் ராஜமவுலியும் கலந்துகொண்டனர். ராஜமவுலிக்கு இருவரும் கேக் ஊட்டிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related Stories

No stories found.