தனது ட்விட்டர் கணக்கை ஏன் நீக்கினார் இயக்குநர் வெற்றிமாறன்?: பரபரப்பான பின்னணி தகவல்

தனது ட்விட்டர் கணக்கை ஏன் நீக்கினார் இயக்குநர் வெற்றிமாறன்?: பரபரப்பான பின்னணி தகவல்

தனது ட்விட்டர் கணக்கை திடீரென இயக்குநர் வெற்றிமாறன் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு குறித்த கதைக்களம் என்பதால் மதுரையை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தையும் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் திடீரென தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 'விடுதலை', 'வாடிவாசல்' ஆகிய இரண்டு படங்களின் வேலைகளில் அவர் பிஸியாக இருப்பதால் கவனச்சிதறலைத் தடுக்கவே அவர் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in